ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் அறம். அவருடன் காக்கமுட்டை விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சுமி, வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர், கோபி நயினார் இயக்கி உள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கொட்டப்பள்ளி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.
இதில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்துள்ளார். சுனுலட்சுமியின் குழந்தை ஒன்று சட்டவிரோதமாக தோண்டப்பட்டிருக்கும் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து விடுகிறது. கலெக்கடரான நயன்தாரா ஸ்பாட்டிலேயே நின்று குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார், ஆழ்குழாய் தோண்டிய அரசியல் பெரும்புள்ளி மீது எப்படி நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் கதை.
சமீபத்தில் படம் தணிக்கை குழுவிற்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் பேசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்னை குறித்தும், இதுபோன்ற படங்களில் துணிச்சலுடன் நயன்தாரா நடிப்பது குறித்தும் பாராட்டி உள்ளனர். படம் அக்டோபர் மாதம் வெளிவருகிறது.