ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல் நடித்த குரங்கு பொம்மை படம் கடந்த 1-ந் தேதி வெளிவந்தது. நிதிலன் இயக்கி இருந்தார், அஜ்னேஷ் லோக்நாத் இசை அமைத்திருந்தார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்ததிருந்தார். ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்திருந்தது.
பணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட அசாதாரண முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதை ஒரு க்ரைம் திரில்லர் ஜார்னரில் சொன்ன படம். இதில் விதார்த்தின் தந்தையாக நடித்த பாரதிராஜாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். எஸ் போக்கஸ் என்ற நிறுவனம் இதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. குரங்கு பொம்மை படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்கிறார் எஸ்.போக்கஸ் நிறுவன உரிமையாளர் எம். சரவணன்.