விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ் சினிமாவில் தொடர் விடுமுறையை குறி வைத்து படங்கள் ரிலீஸாவது வழக்கம். இந்த சரஸ்வதி, ஆயுத பூஜை விடுமுறைக்கு, ஸ்பைடர், கருப்பன், ஹர ஹர மஹா தேவகி மற்றும் நெறி ஆகிய நான்கு படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றில் ஸ்பைடர் படம் செப்., 27-ம் தேதியும், மற்ற மூன்று படங்கள் செப்., 29-ம் தேதியும் ரிலீஸாகின்றன. அந்த படங்கள் பற்றிய ஓர் பார்வை...
ஸ்பைடர்
கத்தி படத்திற்கு மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் முருகதாஸ். தெலுங்கில் பெரிய ஹீரோவான மகேஷ்பாபு, தமிழிலும் நேரடியாக தடம் பதிக்க ஆசைப்பட்டு களத்தில் இறங்குகிறார். ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அறிவியல் புனைவு படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால் பாகுபலி-2க்குப் பிறகு பெரிய வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பன்
ரேணிகுண்டா, 18 வயசு படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கியிருக்கும் படம். விஜய் சேதுபதியின் முறுக்கு மீசையுடன் கூடிய முரட்டு தோற்றமும், ஜல்லிக்கட்டு காளையை அவர் அடக்குவது போன்ற முதல் பார்வையும் வெளிவந்து கவர்ந்தது..
விஜய் சேதுபதி உடன் தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கிராமத்துக் கதை களத்தில், கணவன் - மனைவி இடையேயான உறவைப் பற்றி சொல்கிற படமாக உருவாகி இருக்கிறது. .
ஹர ஹர மஹாதேவகி
அடல்ட்ஸ் ஒன்லி என வெளிப்படையாக அறிவித்து குடும்பத்தாருடன் வந்து படத்தைப் பார்க்காதீர்கள் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்குப் பிறகு இந்தப் படமும் கடும் சர்ச்சையிலும் விமர்சனங்களிலும் சிக்கலாம்.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் முதல் படத்தையே அடல்ட்ஸ் ஒன்லி படமாக இயக்கியுள்ளார். ரங்கூன், இவன் தந்திரன் ஆகிய படங்கள் கவுதம் கார்த்திக்கு கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போன படங்களாக அமைந்தன. ஹர ஹர மஹாதேவகி கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கவுதம். இவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார்.
நெறி
பகவதி பாலா இயக்கத்தில், மோகன் குமார் நடிப்பில் ஏற்கனவே இரண்டு - மூன்று முறை தள்ளிப்போன நெறி படம் செப்., 29ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படங்கள் வெளியாவதில் கடைசி நேர மாறுதல்கள் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.