தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் பிரமாண்ட படம் சங்கமித்ரா. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாகுபலி போன்று சரித்திர கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்க ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கயிருந்தார். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் உலகத்திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
ஆனால் அதன்பிறகு திடீரென்று சங்கமித்ராவில் இருந்து வெளியேறினார் ஸ்ருதிஹாசன். இதனால் உடனடியாக தொடங்கயிருந்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளுக்கும் பரிட்சயமான நடிகை தேடி வந்தவர்கள், நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வருடக்கணக்கில் கால்சீட் கேட்டதால் அவர்கள் எதிர்பார்த்த நடிகைகள் ஒர்க்அவுட்டாகவில்லை.
இந்த நிலையில், இந்த காலதாமதம் காரணமாக கலகலப்பு-2 படத்தை தொடங்கினார் சுந்தர்.சி. ஆனால் இந்தநேரத்தில் தற்போது எம்.எஸ்.தோனி என்ற இந்தி படத்தில் நடித்த திஷா பதானி, சங்கமித்ரா படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.