ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வெள்ளியன்று சஞ்சய் தத்தின் பூமி படமும், ஸ்ரத்தாவின் ஹசீனா பார்கர் படமும் வெளிவந்தது. சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரி படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூமி படம் ஈடு செய்யவில்லை. ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரான பூமி படம் 1800 தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்த நிலையில் வெறும் ரூ.7.48 கோடி தான் வசூலித்திருக்கிறது.
இதேப்போன்று தாவுத்தின் தங்கை ஹசீனா பற்றிய வாழ்க்கை படம் என்பதால் ஹசீனா பார்கர் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படமும் ரசிகர்களை கவரவில்லை. ரூ.25 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஆயிரம் தியேட்டர்களில் வெளிவந்த இப்படம் நான்கு நாட்களில் வெறும் ரூ.6.10 கோடி தான் வசூல் செய்துள்ளது.
ஆகையால் இரண்டு படங்கள் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தான் தழுவும் என விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
அதேசமயம், இந்த இரண்டு படங்களுடன் வெளியான, இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட நியூட்டன் படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.