ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். இவர் அடுத்தப்படியாக விஷால் பரத்வாஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக் காமெடி படமாக இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து நவாசுதீன் கூறுகையில், விஷால் பரத்வாஜ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நிச்சயம் ஒருநாள் அவரது படத்தில் நடிப்பேன் என்று நம்பினேன். இன்றைய காலக்கட்டத்தில் மிகச் சிறந்த படைப்பாளி அவர். எனக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்று தெரியவில்லை, அதைப்பற்றியும் கவலையில்லை, ஆனால் விஷால் பரத்வாஜ் படத்தில் நடிக்கும் நாளை எண்ணி த்ரில்லர் ஆர்வத்தோடு உள்ளேன் என்றார்.
காமினி, ஹைடர், ரங்கூன் படங்களில் விஷால் பரத்வாஜிடம் உதவியாளராக இருந்த ஆதித்யா நிம்பால்கர் தான் இப்படத்தை இயக்க உள்ளார். விஷால் பரத்வாஜ் தயாரிக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது.