Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கட்சி பெயர், கொடி, சின்னம் தயாராகிறது: அரசியலில் கமல் இறங்குவது உறுதியானது

26 செப், 2017 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Party-symbol,-flag-under-process-:-Kamals-Political-update

கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும், பொது வெளிகளிலும் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது தற்போது உறுதியாகி உள்ளது. நேற்று அவர் அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

அரசியலில் இறங்கவும், தனிக்கட்சி தொடங்குவதிலும் உறுதியாக இருக்கிறேன். அரசியல் கல்விக்காகத்தான் பினராய் விஜயன், கெஜ்ரிவால் போன்றவர்களை சந்திக்கிறேன். கட்சியின் பெயர், கொடி, சின்னம் தேர்வு செய்யும் பணியை தொடங்கி விட்டேன். அது உடனே முடியும் என்ற எதிர்பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

கட்சி தொடங்குதவற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அது முடிந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியாது. சமைத்து முடிப்பதற்கு முன் பரிமாற முடியாது. அரசியலில் நான் முழுமையாக ஈடுபடும்போது சினிமாவில் நடிப்பது சரியாக இருக்காது. இரண்டு படகுகளில் கால்வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.

அரசியலுக்கு வரும்போது எதிர்ப்பு இருப்பது இயற்கைதான். எதிர்ப்பு இல்லாமல் எதுவும் இல்லை. எது செய்தாலும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும், ஊருக்கு எது நல்லதோ அதை செய்கிறேன். மக்களுக்கு விரோதமான கட்சிகளுக்கு மாற்றாக எனது அரசியல் இருக்கும். ஆட்சிக்கு வரமுடியாத பல நல்ல கட்சிகள் இருக்கிறது. அந்த கட்சிகளின் கருத்துக்களையும், கொள்கைகளையும் எடுத்துக் கொள்வேன்.

தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்கள் கையில் இருக்கிறது. என்னை நம்பி பணம் போட்டவர்களை கைவிட முடியாது. அதனால் அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு பொது வாழ்வுக்கு வருவேன் என்கிறார் கமல்.

Advertisement
பொங்கலுக்கு இரும்புத்திரை ரிலீஸ்பொங்கலுக்கு இரும்புத்திரை ரிலீஸ் இந்த வருடம் ஓவியா தீபாவளி இந்த வருடம் ஓவியா தீபாவளி


வாசகர் கருத்து (50)

vnatarajan - chennai,இந்தியா
02 அக், 2017 - 15:23 Report Abuse
vnatarajan தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த நடிகரும் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து நேராக ஆட்சியை பிடித்ததாக இதுவரையிலும் சரித்திரத்தில் இடம்பெறவில்லை . அப்படி செய்தால் விஜயகாந்துக்கு நேர்ந்த அனுபவம்தான் கமலுக்கும் நேரிடலாம் ஆகையால் கமல் NTR , MGR வழியில் சென்றால் கோட்டையை பிடிக்க வாய்ப்பு உள்ளது. . ஜேஜே கூட MGR உயிருடன் இருக்கும்போதே பல வருடங்கள் ADMK யில் சேவை செய்தபிறகே ஆட்சி பீடத்தில் அமரமுடிந்தது கமல் இதை சிந்தித்து பார்க்கவேண்டும்
Rate this:
balakrishnan - Mangaf,குவைத்
27 செப், 2017 - 10:01 Report Abuse
balakrishnan இவரது கட்சிக்கு போனி ஆகாது
Rate this:
Raj Anandaraj - tirunelveli,இந்தியா
27 செப், 2017 - 09:14 Report Abuse
Raj Anandaraj அடுத்து என்ன தமிழர்களே , இவரை எப்படி காலை பிடித்து இழுத்து கீழே போட்டு மிதிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? ஒருத்தன் மேலே வருகிறான் என்றால், அவன் மீது உள்ள குறைகளை பெரிதாக்கி, அவனுடைய சொந்தவாழ்வில் உள்ள பிரச்சினைகளை பொது வாழ்வோடு ஒப்பிட்டு, அவன் அரசியலுக்கு ஏன் வந்தோம் என்று யோசிக்கும் அளவுக்கு அவனை பற்றி பேசி, கடைசியில் நம்மை நாமே ஒரு வெடித்து ஆளிடம் அடிமையாகி கொண்டு அப்புறம், நம்மை வழிகாட்ட ஒருத்தன் கிடைக்கமாட்டானா என்று ஏங்கி கொண்டிருக்க தயாராகி கொண்டிருக்கிறீர்களா? ஒருவன் நல்லது செய்யணும்னு நினைக்கும்போது செய்ய விடுங்கள். அவன் பேசுவது புரியவில்லை, அவன் சொந்தவாழ்வில் நல்லொழுக்கம் இல்லாதவன் என்று அவனை பற்றிய குறைகளை மட்டும் ஏன் சொல்லுகிறீர்கள்? அவன் செய்த நல்ல காரியங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? கமல் தன் சொந்த வாழ்வில் தவறு செய்யவில்லை
Rate this:
Raja Seb - Chennai,இந்தியா
27 செப், 2017 - 08:57 Report Abuse
Raja Seb உங்களின் கலை சேவை இன்னும் நெறய இருக்கு அத பண்ணுங்க... ரஜினி அவரக்ளுக்கு வயதாகி விட்டது ரஜினி அய்யா நீங்க அரசியலுக்கு வந்தால் உங்க உடல் நலம் கண்டிப்பா பாதிக்கும் , தன்னுடைய உடல்நலத்தை நல்ல பார்த்து கொண்டு தன் பேர பிள்ளைகளோடு இனிமையா பொழுதை கழிக்கலாம் ... ஒரு விஷயம் ஒரு நல்ல அரசியலை உருவாக்க ஐடியா பண்ணலாம் ...
Rate this:
Raja Seb - Chennai,இந்தியா
27 செப், 2017 - 08:49 Report Abuse
Raja Seb கமல் சார் உங்களுக்கும் ரஜினிகாந்துக்கு உண்மையிலே தமிழ் நாட்டின் மீது அக்கரை இருந்தால் எல்லா மக்களையும் எல்லா உயிர்களையும் இந்த மண்ணையும் உளமார நேசிக்கிற நல்ல மனிதன் சீமானை ஆதரித்து அவருக்கு ஒரு வாய்ப்பு தரலாம் ...
Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in