இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த சில வருடங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களாகவே நடித்து வருகிறார் நயன்தாரா. அறம், கொலையுதிர் காலம் படங்களில் தற்போது நடித்து வரும் நயன்தாரா அடுத்து 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு இப்படம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் அறிவழகன். தற்போது இப்படம் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிவழகனின் நண்பரும் ஆஸ்தான இசையமைப்பாளரான எஸ்.எஸ்.தமன் இந்தப்படத்துக்கும் இசையமைக்கிறார்.
ஈரம் படத்தை ஹாரர் த்ரில்லர், ஆறாது சினம் படத்தை இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், குற்றம் 23 படத்தை மெடிக்கல் த்ரில்லர் என தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் த்ரில்லராகவே இயக்கி வரும் அறிவழகன் அடுத்து இயக்கும் படத்தை சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கவிருக்கிறாராம்.
இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோவுக்கு கதையில் பெரிய பங்கு இல்லையாம். எனவே ஓரளவுக்கு தெரிந்த அவருக்கு ஏற்ற வகையிலான ஹீரோவை நடிக்க வைக்க இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார்.
இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளுக்கு மூன்று மாத காலம் தேவைப்படுவதால், 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் படத்தின் படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.