Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பா.ஜ., கூட்டணிக்கு ஏற்றவர் ரஜினி : கமல் கருத்து

25 செப், 2017 - 18:03 IST
எழுத்தின் அளவு:
Rajini-Suitable-Ally-of-BJP-says-Kamal-Haasan

ஆன்மிக கோட்பாடு உள்ளிட்ட சில விஷயங்கள் ஒத்துப்போவதால் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க ரஜினி ஏற்றவர் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தமிழக மக்களுக்காக முதல்வராவேன், 100 நாளில் தேர்தல் வந்தால் கட்சி ஆரம்பிப்பேன் என்றெல்லாம் சொன்னவர், தற்போது தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அரசியல் பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

யாருடனும் கூட்டணி இல்லை
நிறைய கட்சிகளுடன் அரசியல் குறித்து அறிவுரை கேட்டு வருகிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததால் அவருடன் கூட்டணி என்று அர்த்தமில்லை. நான் அவரை சென்று சந்திக்கவில்லை, அவர் தான் என்னை வந்து சந்தித்தார். நேரம் குறிப்பிட்டு நான் கட்சி தொடங்க மாட்டேன். ஆனால் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவேன்.

ஊழல் தான் எனது போர்
திராவிட கட்சிகளுக்கு எதிராக தான் எனது கட்சி இருக்கும். திமுக., மற்றும் அதிமுக., கட்சிகளின் ஊழல்களை பார்த்தவர்கள் தமிழக மக்கள். எனது போராட்டம் ஊழலுக்கு எதிராகத் தான் இருக்கும்.

பா.ஜ., கூட்டணிக்கு ரஜினி ஏற்றவர்
நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள், அரசியலுக்கு நான் வருவது குறித்து அவரிடம் தெரிவித்து விட்டேன். ஆன்மிகத்தில் ரஜினி நம்பிக்கை உடையவர், பா.ஜ., உடனான கூட்டணிக்கு அவர் ஏற்றவர். நான் பகுத்தறிவாதி. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன், கம்யூனிஸவாதியும் கிடையாது. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்.

எனக்கு, என் நாடு மிகவும் பிடிக்கும். என் வீட்டில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் தான் என் நாடு தொடங்கும். வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் இடைவெளி உள்ளது. தமிழகம் பற்றி டில்லிக்கு தெரியாது, டில்லி பற்றி தமிழகத்திற்கு தெரியாது. அதனால் தான் தேசிய கட்சிகளால் இங்கு ஜெயிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ருவருக்கத்தக்கது
மற்றொரு பேட்டியில், நானும், ரஜினியும் நல்ல நண்பர்கள். ரஜினி ஒரு பாதையில் செல்பவர், நான் வேறு பாதையில் செல்பவன், என்னையும், அவரையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கத்தக்கது. நான் அரசியலில் களம் இறங்க போகிறேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.

என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். நான் ஆரம்பிக்கும் கட்சிக்கு, ஆம் ஆத்மி கட்சி போல் மக்களிடமிருந்து நிதி திரட்டப்படும் என்றார்.

Advertisement
தீபாவளிக்கு ஸ்கெட்ச் டீஸர் வெளியீடுதீபாவளிக்கு ஸ்கெட்ச் டீஸர் வெளியீடு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார்? நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் ...


வாசகர் கருத்து (45)

power - erode,இந்தியா
27 செப், 2017 - 00:07 Report Abuse
power சீமான் போன்று பதவிக்கு வருவதற்காக வீட்டுக்கூஒரு வீரப்பனை உருவாக்குவோம் என்று கூறவில்லை.
Rate this:
Manigandan R - New Delhi,இந்தியா
26 செப், 2017 - 11:46 Report Abuse
Manigandan R அடுத்த சுரண்டல் ஆரம்பம். தயவு செய்து இவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாதீங்க. கெஜ்ரிவால் ரொம்ப குதிச்சாரு இப்ப என்ன ஆனார்.
Rate this:
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
26 செப், 2017 - 10:13 Report Abuse
Kasiniventhan Muthuramalingam நீங்க ரொம்ப விஷயம் தெரிந்த மேதாவிதான். நாட்டுக்கு சேவை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கு ரொம்ப வளர்ந்து விட்ட ஈகோ வாழ் தான் கிரேன் naanum முதலமைச்சர் ஆகி காட்டுகி ரென் என்கிறீர்கள். இது வரை எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்து காமெடி பண்ணி போய் விட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி, மனோரமா ஆச்சி, எம்ஆர்ராதா, பாக்கிய ராசா, டீ ராஜேந்தர், சரத் குமார், பாக்கிய ராசா... போதும் சாமி... muthalil சினிமாவில் நிறுத்தி இருக்கும் கருப்பு பணம், நடிகைகளின் மீது பாலியல் தொல்லைகள் இவற்றை எதிர்த்து புரட்சி செய்யுங்கள்.. 7 கோடி தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பது நீங்களோ, ரஜினிகாந்த் முதலான தனி நபர்கள் இல்லை.
Rate this:
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
26 செப், 2017 - 09:54 Report Abuse
Kasiniventhan Muthuramalingam நீங்க ரொம்ப விஷயம் தெரிந்த மேதாவியாக இருக்கலாம்.
Rate this:
Senthil kumar - coimbatore,இந்தியா
26 செப், 2017 - 09:46 Report Abuse
Senthil kumar காமராஜரையே தோற்கடித்தவர்கள் நமது மக்கள் எச்சரிக்கை தேவை.
Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film VadaChennai
  • வடசென்னை
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Jail
  • ஜெயில்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • இயக்குனர் :வசந்த பாலன்
  Tamil New Film Annanukku Jai
  • அண்ணனுக்கு ஜே
  • நடிகர் : ‘அட்டகத்தி’ தினேஷ்
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்குமார் (வெற்றிமாறன் உதவியாளர்)
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in