ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய போட்டியாளர்களாக சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் உள்ளனர்.
கதாநாயகன் படம் வெளியானபோது விஷ்ணு விஷால் மற்றும் கத்ரீனா தெரஸா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது படத்தை புரொமோஷன் செய்தனர். இந்நிலையில், இப்போது நடிகை அஞ்சலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஜெய் - அஞ்சலி நடிப்பில் பலூன் படம் உருவாகி உள்ளது. சினிஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை புரொமோஷன் செய்யும் விதமான அஞ்சலி மற்றும் சினிஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அதோடு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஓவியா பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வார்த்தை, பலூன் படத்தில் ஒரு பாடலாகவும் உருவாகி உள்ளது.
பிக்பாஸின் இன்றைய புரொமோஷன் வீடியோவில் அஞ்சலி, வீட்டில் இருப்பவர்களுடன் ஷட் அப் பன்னுங்க பாடலுக்கு ஆடி - பாடி மகிழும் வீடியோவும் வெளியாகியுள்ளது.