'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ், காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் மாரி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.
வேலையில்லா பட்டதாரி-2வைத் தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக மாரி-2 படத்திற்கு கால்சீட் கொடுத்துள்ளார்.
அக்டோபர் மாதம் முதல் மாரி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் பேசி வரும் பாலாஜிமோகன், இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் டொவினோ தாமஸ் என்பவரை புக் பண்ணியுள்ளார். இவர் தான் மாரி படத்தில் விஜய் யேசுதாஸ் நடித்த வில்லன் வேடத்தை தொடரப்போகிறாராம்.
டொவினோ தாமஸ், தற்போது மலையாளத்தில் முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார். அதோடு, தனுஷ் மலையாளத்தில் தயாரித்த முதல்படமான தரங்கம் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.