ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தவர் சுமன். இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் வில்லனாக நடித்து அதன் மூலம் சினிமாவில் மீண்டும் நுழைந்து தற்போது வில்லன், மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். நேற்று ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட சுமன், பின்னர் நிருபர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சினிமாவில் நிறைய நடித்து விட்டேன். இப்போது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு சென்றால் மட்டுமே முடியும். அதனால் அடுத்த ஆண்டு அரசியலுக்கு செல்கிறேன். எந்த கட்சியில் சேருவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து தான் மக்கள் பணியாற்றுவேன் என்றார்.
இளம் பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த வழக்கில் சுமன் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.