பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான், கேதார்நாத் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கனவே துவங்கி, நடந்து வருகிறதாம்.
இப்படத்தில் சாரா நடிக்கிறார் என்பதை உறுதி வகையில் அவரது படங்கள் வெளியாகி உள்ளன. அதில், நீல நிற ஸ்வட்டருடன் அடர்நீல நிலத்தில் துப்பட்டா அணிந்து, தோளில் நீல நில பையை போட்டபடி மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார் சாரா.
2013 ம் ஆண்டு ஏற்பட்ட உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கை மையமாகக் கொண்டது தான் கேதார்நாத் படத்தின் கதையாம். அபிஷேக் கபூர் இயக்கும் இப்படத்தை ஏக்தா கபூர் மற்றும் கிர்அர்ஜ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சூஷந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறாராம்.