'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய தேதியில் உடன் நடிப்பவர்கள் யார், தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார்? என்று எதையும் பார்க்காமல் கதையும், கேரக்டரும் எப்படி என்று பார்க்கிற நடிகர் விஜய் சேதுபதிதான். அவர் தற்போது கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இதில் நிகரிகா, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். 7ஜி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.ஆறுமுக குமார், அம்மா நாராயணா புரொடக்ஷன் சார்பில் ரமேஷ் காளிமுத்து, கணேஷ் காளிமுத்து ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். பி.ஆறுமுக குமார் இயக்குகிறார்.
இது பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் பேண்ட்சி காமெடி படம். இதன் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி எமன் தோற்றத்தில் நிற்பது போன்றும், கவுதம் கார்த்திக் பயணம் செல்லும் ஒரு இளைஞன் போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிவாஜி நடித்த எமனுக்கு எமன், ரஜினி நடித்த அதிசய பிறவி போன்று இதுவும் மனிதனுக்கும், எமனுக்குமான பிரச்சினை கதை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.