இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி நடித்த கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடலை பாடி பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். அதோடு இவர் பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்தபடி, பாடல்கள் எழுதி, பின்னணியும் பாடி வருகிறார். சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்றுதான் வந்தேன். சரியான சந்தர்ப்பங்கள் அமையாததால் பாடல் எழுதி பாடினேன். அது ஒர்க்அவுட்டாகி விட்டது. அதனால் இப்போது பாட்டு எழுதி பாடுவதில் எனது பயணம் தொடர்கிறது. இருப்பினும் சினிமாவில் கண்டிப்பாக ஒருநாள் இயக்குனராவேன் என்று கூறி வந்த அருண்ராஜா காமராஜ், தற்போது ஒரு படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் இயக்கும் படம் பெண் கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தமான கதையில் உருவாகிறது. இதுவரை ஆண்கள் சம்பந்தப்பட்ட படங்கள்தான் அதிகமாக வந்துள்ளன. அதனால் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட கதையில் இந்த படத்தை இயக்குகிறேன். அதோடு, இந்த படத்தில் கிரிக்கெட் தெரிந்த பெண்கள் மட்டுமின்றி நடிப்பும் தெரிந்த பெண்களை மட்டுமே தேர்வு செய்யப்போகிறேன்.
அந்த வகையில், இதுவரை தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் கிரிக்கெட் தெரிந்த பெண்கள் நூற்றுக்கணக்கில் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி போட்டோக்களை அனுப்பி வருகிறார்கள்.
அதனால் அவர்களை அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை வரவைத்து ஆடிசன் நடத்துகிறேன். குறிப்பாக, கிரிக்கெட் வீரர்களாக இருந்தபோதும் நடிப்பும் தெரிந்த நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறேன். அதோடு, 18 வயதில் இருந்து 25 வயது வரை உள்ளவர்களாக தேர்வு செய்யப்போகிறேன்.
மேலும், நான் பல படங்களில் நடித்திருந்தபோதும், நான் இயக்கும் படத்தில் நடிக்க மாட்டேன். பாடல் எழுதுவது, பாடுவதோடு நிறுத்திக்கொள்வேன் என்கிறார் அருண்ராஜா காமராஜ்.