‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
முதன்முறையாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள துல்கர் சல்மான், தற்போது 'கர்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். இந்தப்படத்தில் துல்கருக்கு ஜோடியில்லை என்றும் சொல்லப்பட்டது..
ஆனால் தற்போது துல்கருக்கு ஜோடியாக க்ரீத்தி கர்பந்தா நடிக்க இருக்கிறாராம். ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்தாரே, அவர்தான் இவர்.. இந்தப்படம் வெவ்வேறு வாழ்க்கை பின்னணி கொண்ட இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக உருவாகிறதாம்.. ஹிந்திப்படமாக இருந்தாலும் இதன் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் சுமார் நடைபெறுகிறது.
இந்தப்படத்தை தொடர்ந்து நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் துல்கரின் ஜோடியாக ரிது வர்மா என்பவர் நடிக்கிறார்.