தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
த்ரிஷ்யம், பாபநாசம் புகழ் மலையாள நடிகையான ஆஷா சரத், நடிக்க வந்த இந்த சில வருடங்களுக்குள் வயதில் சீனியராக பார்க்கப்பட்டாலும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களான மோகன்லால், மம்முட்டி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் மம்முட்டியுடன் 'வர்ஷம்' படத்தில் மனைவியாக நடித்த ஆஷா சரத், சமீபத்தில் வெளியான 'புள்ளிக்காரன் ஸ்டாரா' என்கிற படத்திலும் மம்முட்டியுடன் இணைந்து அவரது தோழியாக நடித்திருந்தார்.
இந்தநிலையில் அடுத்ததாக 'அங்கிள்' என்கிற படத்தில் மூன்றாவது முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேரும் ஆஷா சரத், இந்தப்படத்தில் அவரது மனைவி கேரக்டரில் நடிக்கிறார். 'ஷட்டர்' பட புகழ் இயக்குனரும், நடிகருமான ஜாய் மேத்யூ இந்தப்படத்தை இயக்குகிறார். ஆஷா சரத் தவிர, துல்கருடன் 'சி.ஐ.ஏ' படத்தில் ஜோடியாக நடித்த கார்த்திகா முரளிதரனும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்..