மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள சரித்திர படம் பத்மாவதி. இதில் பத்மாவதியாக தீபிகா நடிக்கிறார். இவர்களுடன் ஷாகித் கபூரும் ஒரு முக்கியமா ரோலில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு கட்டங்களாக நடந்து கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் பத்மாவதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தீபிகா பத்மாவதியாக அழகிய ஆபரணங்கள் எல்லாம் அணிந்து ஒரு ராணி தோற்றத்தில் போஸ் கொடுக்கிறார். மேலும் இப்படத்தின் போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிபோய் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இப்படம் நவ., 17-ம் தேதி ரிலீஸாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிவடையாததால், டிச., 1-ம் தேதிக்கு படத்தை தள்ளி வைத்துள்ளனர்.