'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. டேவிட் தவானே இயக்க, சல்மானுக்கு பதில் வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இம்மாதம் ரிலீஸாக உள்ளது.
ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்போதே பாதி முதலீட்டை எடுத்து விட்டது. இப்படத்தின் சாட்டிலைட் விற்பனை மூலம் ரூ.30 கோடியும், ஆடியோ ரைட்ஸ் மூலம் ரூ.12 கோடியும் வருவாய் ஈட்டுள்ளது. தொடர்ந்து படத்திற்கான விநியோக உரிமை சிறப்பாக இருப்பதால் படம் எப்படியும் நல்ல வசூலை தரும் என படக்குழு நம்புகிறது.
ஜூட்வா படத்தில் வருண் ஜோடியாக டாப்சி மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்திருக்கின்றனர். சாஜித் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்., 29-ம் தேதி ரிலீஸாக உள்ளது.