மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் காமெடியனாக நடித்தவர் ஜனகராஜ். இவர் ரஜினிகாந்தின் நெருக்கமான நண்பரும்கூட. நீண்டகாலமாக சினிமாவை விட்டு விலகியிருந்து வந்த இவர், தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். தற்போது தா தா 87 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதே படத்தில், நெஞ்சத்தை கிள்ளாதே, விக்ரம், உரிமை கீதம், ராஜாவின் பார்வையிலே, ஜெய்ஹிந்த் என பல படங்களில் நடித்த சாருஹாசனும், தா தா 87 படத்தில் ஜனகராஜூடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய் சிரிக் என்பவர் இயக்கியுள்ளார்.
மேலும், காமெடி கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகிய இருவரும் தா தா வேடத்தில் நடிக்கிறார்களாம். 1987ல் நடக்கும் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறதாம். குறிப்பாக, வெளியில் வெறப்பாகவும், உள்ளுக்குள் பயந்து நடுங்கும் காட்சிகளில் அவர்கள் அடித்துள்ள லூட்டி படம் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறதாம். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.