மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள மெர்சல் படத்தின் டீசர் 3 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை தாண்டி இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்த விவேகம் டீசரை 3 மணி நேரத்தில் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியாகும் முன்பிருந்தே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். டுவிட்டரில் மெர்சர் டீசர் என்ற வார்த்தையை இந்திய அளவில் முதலிடத்தில் டிரண்ட் செய்தனர்.
டீசர் வெளியாகி சில நிமிடங்களிலேயே லட்ச கணக்கான மக்கள் பார்க்க துவங்கினர். டீசர் வெளியாகி 90 வது நொடியிலேயே 25 ஆயிரம் லைக்குகளை பெற்று புதிய உலக சாதனைக்கான முதல் அடியை எடுத்து வைத்தது மெர்சல் டீசர். தொடர்ந்து இமயமாக எகிறிய லைக்குகள் 3 மணி நேரத்திலேயே 6 லட்சம் லைக்குகளை கடந்தது.
விவேகத்தை முறியடித்த மெர்சல்:
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளியாகி உலக அளவில் சாதனை படைத்து முதலிடத்தில் இருந்த விவேகம் படத்தின் ரெக்கார்டுகளை 3 மணி நேரங்களிலேயே மெர்சல் டீசர் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. மெர்சல் டீசர் உலக அளவில் குறைந்த நேரத்தில் அதிக லைக்குளை பெற்ற டீசர் என்ற சாதனையையும் பெற்றதுள்ளது. இந்த சாதனை ஹாலிவுட் படங்களே இதுவரை பெற அடையாத சாதனையாக அமைந்துள்ளது.
டிஸ் லைக்கிலும் சாதனை:
அதே நேரத்தில் விவேகம் படத்தின் டீசர் இதுவரை 89 ஆயிரம் டிஸ் லைக்குகளை பெற்றுள்ள நிலையில் இன்று வெளியான மெர்சல் டீசர் இப்போதே 1 லட்சத்தி 28 ஆயிரம் டிஸ்லைக்குகளை பெற்று இதிலும் சாதனை படைத்துள்ளது.