இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நமீதா பிரமோத். இவர் என் காதல் புதிது என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது, பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பார்வதி நாயர், நமீதா பிரமோத்தும் நடிக்கின்றனர். இரண்டு பேருக்கும் சரிசமான வேடம் கொடுத்திருக்கிறாரம் பிரியதர்ஷன்.
தமிழில் முயற்சி எடுத்து படங்கள் கிடைக்காமல் மீண்டும் மலையாள சினிமாவுக்கே திரும்பிச்சென்று விட்ட நமீதா பிரமோத், இந்த படத்திற்கு பிறகு கோடம்பாக்கத்தில் நிலைத்து விட வேண்டும் என்பதற்காக இப்போதே சில டைரக்டர்களை சந்தித்து பட வேட்டையை முடுக்கி விட்டிருக்கிறார். நயன்தாரா பாணியில் அவர் நடித்து வரும் வேடம் போன்று அழுத்தமான வேடங்களில் நடிக்க விரும்புகிறாராம்.