தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியாகியுள்ள படம் துப்பறிவாளன். இந்த படத்தை விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருந்தார். விஷாலுடன் பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்தனர். செப்டம்பர் 14-ந்தேதி இப்படம் வெளியானது.
இந்நிலையில், தற்போது துப்பறிவாளன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு டிடெக்டிவ் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு முன்பு விஷால் நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள நிலையில், இப்போது துப்பறிவாளனும் டப் செய்யப்படுகிறது. இப்படம் அக்டோபர் மாதம் தெலுங்கில் ரிலீசாகிறது.