ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காம்ரேட் இன் அமெரிக்கா (சி.ஐ.ஏ) படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா முரளிதரன். முதலில் இதன் கதாநாயகியாக ஒப்பந்தமான அனு இம்மானுவேல் (துப்பறிவாளன் நாயகி), விசா சிக்கல் காரணமாக மாற்றப்பட்டு, அதன்பின் கார்த்திகா முரளிதரன் கதாநாயகியாக உள்ளே வந்தார். இத்தனைக்கும் இந்த கார்த்திகா வேறு யாருமல்ல, பிரபல ஒளிப்பதிவாளர் சி.கே.முரளிதரனின் மகள் தான்.
இந்த சி.கே.முரளிதரன் தான் பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் வெளியான இரண்டு சூப்பர்ஹிட் படங்களான '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.. தனது பேவரைட் நாயகன் துல்கர் சல்மானுடனேயே தனது முதல் படம் அமைந்ததில் ரொம்பவே சந்தோஷத்தில் இருந்த கார்த்திகா முரளிதரனுக்கு, அவரது இரண்டாவது படத்திலேயே மம்முட்டியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஷட்டர் பட இயக்குனர் ஜாய் மேத்யூ இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'அங்கிள்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தினர், எதிர்பாரத சிக்கல் ஒன்று ஒன்று வரும்போது அதை எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதையாம்.