ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்த முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக தமிழில் படம் கிடைக்காமல் தெலுங்கிற்கு சென்று தொடர்ந்து நடித்து வரும் அவர், ஹிந்தியிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் வேட்டகாடு, ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் ரேஸ்-3, தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படம் என பிசியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே.
சினிமாவில் 2012-லேயே நடிகையாகி விட்டபோதும், இப்போதுதான் பூஜாவின் சம்பளம் அதிகரித்துள்ளதாம். அதனால் சினிமாவில் தான் நடித்து சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே. அந்த காரின் மேல் தான் அமர்ந்துள்ள ஒரு போட்டோவையும் தற்போது வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.