Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடித்த கன்னடப் படம் தமிழில் வெளிவருகிறது

20 செப், 2017 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathis-Kannada-movie-to-be-dub-in-Tamil

விஜய் சேதுபதி அதிகம் புகழ்பெற்றிராத காலகட்டதில் அதாவது சுமார் 6 வருடங்களுக்கு மன்பு அகாடா என்ற கன்னடப் படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்தார். இதில் வசந்த், நயன கிருஷ்ணா, அவினாஷ், தர்மா, ரேகா உள்பட பலர் நடித்திருந்தனர். தர்மபிரகாஷ் இசை அமைத்திருந்தார். ஷமன் மித்ரா ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.சிவன் இயக்கி இருந்தார். தற்போது இந்தப் படம் எடக்கு என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது.

"தற்போது விஜய் சேதுபதி தமிழில் முன்னணி நடிகராகியிருக்கும் சூழ்நிலையில் விஜய் சேதுபதி நேரடியாக அதுவும் ஹீரோவாக நடித்த தமிழ் படம்போன்று விளம்பரம் செய்து எடக்கு என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். விஜய் சேதுபதிக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி அவர் வில்லனின் அடியாளாக சிறிய கேரக்டரில் நடித்த படத்தை அவர் ஹீரோவாக நடித்த நேரடி படம் போன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதனை சட்டபூர்வமாக தடுக்க முடியாது. படத்தின் உரிமத்தை வைத்திருப்பவர் எப்படி வேண்டுமானலும் விளம்பரப்படுத்தி வெளியிட உரிமை இருக்கிறது. ஆனால் விநியோகஸ்தர்களும், ரசிகர்களும் ஏமாந்து விடக்கூடாது" என்கிறார் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in