இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி-2 படத்தை அடுத்து நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் அரசியல் கதையில் நடித்த ராணா, அடுத்தபடியாக ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். 1888-ம் ஆண்டு செளராஷ்டிராவில் இருந்து புறப்பட்டுச்சென்ற விஜில் என்ற கப்பல் 700 பணிகளுடன் காணாமல் போன ஒரு கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு "விஜில் மிஸ்டிரி ஆப் தி பேண்டம் ஷிப்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பட இயக்குனர் டுவானில் மேத்தா என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஒரு விஞ்ஞானி வேடத்தில் ராணா நடிக்கிறார். இதே படத்தில் பல ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நடித்தபோதும் ராணா நடிக்கும் விஞ்ஞானி வேடம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாம். அதனால் இந்த படம் தனக்கு ஹாலிவுட்டில் நல்லதொரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிபார்க்கும் ராணா, 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரார்.