ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் 'தேவி'. ஹாரர் படமான தேவி படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஜெயம்ரவியை வைத்து 'வனமகன்' படத்தை இயக்கினார் ஏ.ஏல்.விஜய்.
வனமகன் படத்தை அடுத்து இப்போது சாய் பல்லவி நடிப்பில் 'கரு' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். கரு படத்தை அடுத்து பிரபுதேவாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் விஜய். இந்த படம் சம்பந்தமாக தற்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
'தேவி' படத்தை தொடர்ந்து, 'யங் மங் சங்', 'குலேபகாவலி', கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' முதலான படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இந்த படங்களின் படப்பிடிப்பு ஒரு பக்கம் பரபரப்புக நடைபெற்று வர, கார்த்தி, விஷால், சாயிஷா முதலானோர் நடிப்பில் 'கருப்பு ரஜா வெள்ளை ராஜா' படத்தை பிரபு தேவா இயக்கி தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அந்தப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில்தான் மீண்டும், ஏ.ஏல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்க பிரபு தேவா தேதிகளை ஒதுக்கியிருக்கிறார். இது தேவி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.