ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் அர்ஜுன் ரெட்டி.. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷாலினி பாண்டேயும் தற்போது லைம்லைட்டுக்குள் வந்துள்ளார். மத்தியபிரதேசம் ஜபல்பூரை சேர்ந்த இவர், அர்ஜுன் ரெட்டி படத்திற்காக தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி ஆச்சர்யப்படுத்தினார். அடுத்து சூட்டோடு சூடாக தமிழில் சந்திரமவுலி என்பவர் இயக்கும் '1௦௦% காதல்' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.. தெலுங்கை கற்றுக்கொண்டு தெலுங்கில் டப்பிங் பேசியது போல, தமிழையும் கற்றுக்கொண்டு, நானேதான் தமிழில் டப்பிங் பேசுவேன் என கூறி டைரக்டரை மிரள வைத்துள்ளார் ஷாலினி பாண்டே. அதற்கேற்றவாறு தற்போது அவருக்கு தமிழ் டியூசனும் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்தப்படத்தில் இதற்கு முன் கதாநாயகியாக ஒப்பந்தமான 'பிரம்மன்' நாயகி லாவண்யா திரிபாதி சில காரணங்களால் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாகத்தான் இந்த அர்ஜூன் ரெட்டி' நாயகி உள்ளே வந்துள்ளார். அதுமட்டுமல்ல, துல்கர் சல்மான் நடிக்கும் மகாநதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே.