பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்த்தனம் காலமானார். அவருக்கு வயது 90. சேலம் குகைபாலம் பகுதியில் வசித்து வந்த கோவர்த்தனம், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(செப்., 18) காலமானார்.
ஜெமினி கணேசன் நடித்த கைராசி, ஜெய்சங்கர் நடித்த பட்டணத்தில் பூதம், முத்துராமன் நடித்த பூவும் பொட்டும், சிவாஜி நடித்த அஞ்சல் பெட்டி 520 உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார். தமிழில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த பூவா தலையா படம், 1971-இல் தெலுங்கில் பொம்மா பொருசா என்ற பெயரில் வெளிவந்தது. அதேப்போல ராமு படம் 1966-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் கோவர்த்தனம் தான்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் 20 ஆண்டுகாலம் பல்வேறு மொழி படங்களுக்கு உதவி இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். தென்னிந்திய அளவில் கர்நாடக இசையில் ஆர்மோனிம் வாசிப்பதில் கைதேர்ந்தவர்.
சிவாஜி நடித்த புதியபறவை பாடல் ரீ-ரெக்கார்டிங்கின் போது மின்சாரம் தாக்கி, செவித்திறன் இழந்தார். 1990-களுக்கு பின்னர் சென்னையை விட்டு சேலம் வந்தவர், அங்கேயே செட்டிலாகிவிட்டார். மறைந்த கோவர்த்தனத்திற்கு இந்திராபாய்(வயது 80) எஜ்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.
கோவர்த்தனம் உடல்நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிய போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு, ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கோவர்த்தனத்தின் இறுதிச்சடங்கு இன்று(செப்., 19) மதியம் 2 மணியளவில் நடந்தது.