‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
குணசித்ர நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி. சினிமாவில் ஹீரோவாகும் ஆசையில் நடிப்பு, நடனம், சண்டை என அனைத்து பயிற்சிகளையும் எடுத்தார். மகனை தன் இயக்கத்தில் அறிமுகப்படுத்த விரும்பிய தம்பி ராமைய்யா, ஒரு கூடை முத்தம் என்ற படத்தை தொடங்கினார். என்ன காரணத்தாலோ அந்தப் படத்தை கைவிட்டார்.
அதன் பிறகு உமாபதி பல இடங்களில் வாய்ப்பு தேடினார். தந்தையின் உதவி இல்லாமலேயே அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தின் புரமோசனுக்காக தம்பி ராமைய்யா கடுமையாக உழைத்தார். இமானை இசை அமைக்க வைத்தார். அப்படி இருந்தும் அந்தப் படம் உமாபதிக்கு சாதகமாக அமையவில்லை.
இதனால் மகன் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக இப்போது மகனுக்காக மீண்டும் படம் இயக்க இருக்கிறார் தம்பி ராமைய்யா. படத்தின் பெயர் உலகம் விலைக்கு வருது. அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் உமாபதி காமெடி கலந்த கேரக்டரில் நடித்திருந்தார். மகனுக்கு காமெடி நன்றாக வருவதால் இந்தப் படத்தையும் காமெடியாக உருவாக்க இருக்கிறார். உமாபதிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சமுத்திரகனி, கே.எஸ்.ரவிகுமார், நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்கிறார்கள். குறிப்பாக தம்பி ராமைய்யா தன் மகனுக்கு அப்பாவாகவே நடிக்கிறார். படப்பிடிப்புகள் நவம்பர் 1ந் தேதி தொடங்கி தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் படமாகிறது. தம்பி ராமைய்யாவும், அவரது தங்கை தேன்மொழி சுப்பிரமணியமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தம்பி ராமைய்யா, பல படங்களில் நடித்திருந்தாலும் ஏற்கனவே மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.