ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகும் படம் பேனி கான். இசையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அனில், ஐஸ்வர்யா இருவரும் பாடகர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஐஸ்வர்யா ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் மாதவன் நடிக்க முடியாமல் போக இப்போது அந்த வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாக ராஜ்குமார் ராவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ஐஸ்வர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக கருதுகிறேன். அவருடன் நடிக்கும் ஆவலை எதிர்நோக்கி உள்ளேன். இப்படம் தொடர்பாக இயக்குநரை சந்தித்து பேசினேன். இன்னும் ஐஸ்வர்யாவை சந்திக்கவில்லை. விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்.