இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கைவசம் நிறைய படங்களை வைத்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே இருமுறை காதலில் தோல்வி அடைந்தவர்.
இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையிலேயே இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல இருவருக்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன.
இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று(செப்., 18) பிறந்தநாள். இதையொட்டி அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். கூடவே தனது காதலி நயன்தாராவையும் அழைத்து சென்றுள்ளார். நியூயார்க்கில் இருவரும் பிறந்தநாளை கொண்டியுள்ளனர்.
விக்னேஷ் சிவன் தற்போது, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.