‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஜித் நடித்த, ஆரம்பம் படத்தை தயாரித்த, ஏ.எம்.ரத்னம், சாய்பாபாவின் பக்தர் என்பதால், அந்த படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும், வியாழக்கிழமைகளில் வெளியிட்டார். அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, வியாழக்கிழமை சென்டிமென்டை, தன் ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து வருகிறார், அஜித்.
அதையடுத்து, தற்போது, விஜய்சேதுபதியின், கருப்பன் படத்தை தயாரித்து வரும் ஏ.எம். ரத்னம், இந்த படத்தையும் வியாழக்கிழமையில் துவங்கியதை அடுத்து, ஆடியோவையும், வியாழக்கிழமையே வெளியிட்டார். விளைவு, இப்போது, அஜித் பாணியில், விஜய்சேதுபதியும் இனிமேல் வியாழக்கிழமை சென்டிமென்டை கடைப் பிடிக்கப் போவதாக சொல்கிறார்.
— சி.பொ.,