ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரபல மலையாள இயக்குனர் லோகித்தாசின் உதவியாளரான உதய் சங்கரன், தமிழில் ஏற்கெனவே விருந்தாளி என்ற படத்தை இயக்கி உள்ளார். தற்போது இயக்கி உள்ள படம் கொஞ்சம் கொஞ்சம். புதுமுகங்கள் கோகுல், நீனு ஆகியோருடன் அப்புக்குட்டி, ப்ரியா மோகன், மன்சூரலிகான், மதுமிதா நடித்துள்ளனர். ஆர்.நிக்கி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், வல்லவன் இசை அமைத்துள்ளார். இது அக்கா தம்பி பாசக் கதை என்கிறார் இயக்குனர் உதய் சங்கரன். அவர் மேலும் கூறியதாவது:
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஏராளம். வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம் தான் கொஞ்சம் கொஞ்சம் தன் அக்காவின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை மையம் கொள்கிற பகுதி. இதன் விளைவுகள் பற்றிய பயணமே திரைக்கதையின் போக்கு. காதல், நகைச்சுவை, பாசம் அனைத்தும் இயல்பாகக் கலந்து உருவாகியுள்ளது இப்படம்.
தமிழ் சினிமா ரசிகர்கள் புதுமைகளை ஆதரிக்கவும், ஆராதிக்கவும் தவற மாட்டார்கள். அவர்களை நம்பியே இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். 35 நாட்களில் முழுப்படத்தையும் எடுத்தேன். பொள்ளாச்சி, தேனி, கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அனைவருக்குமான ஒரு படமாக உருவாகியுள்ள கொஞ்சம் கொஞ்சம் வரும் 22-ல் வெளியாகிறது. என்றார் உதய் சங்கரன்.