Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று நினைவு தினம்: நாடக உலகின் சூப்பர் ஸ்டார் எம்.ஆர்.ராதா

17 செப், 2017 - 15:11 IST
எழுத்தின் அளவு:
memories-of-m.r.radha

திரைத்துறையில் சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், அதன் பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இப்போது ரஜினிகாந்த். ஆனால் நாடகத்துறையில் அன்றும் இன்றும் எம்.ஆர்.ராதா ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டா£ர். அவரை ஏன் நாடக உலகின் சூப்பர் ஸ்டார் என்கிறோம்... அதற்கு சில உதாரணங்கள்.

ஒருமுறை திருச்சியில் நாடகம் போட்டார். அந்த நாடகத்துக்கு ஏராளமான போலீசார் இலவச பாஸில் வந்திருந்தார்கள். நாடகத்தில் எம்.ஆர்.ராதா போலீஸ் வேடம் போட்டிருப்பார். போலீசை கண்டு உடன் நடிப்பவர் பயப்படுவார். அப்போது எம்.ஆர்.ராதா நாடகம் பார்ப்பவர்களில் முதல் வரிசையை கைகாட்டி "ஏண்டா போலீஸ்னா பயப்படுற அவனுக்கென்ன பெரிய கொம்பா, இதபாரு முதல் வரிசையில உட்கார்ந்து ஓசியில நாடகக் பார்க்குறாங்க. காசு கொடுத்தவன் பின்னாடி உட்கார்ந்திருக்கான்" என்றார்.


அந்தக் காலத்தில் நாடகத்துக்கென்று சில வரைமுறைகள் இருந்து. முதுகை காட்டி நடிக்ககூடாது என்பது அதில் முக்கிமானது. ஆனால் இழந்த காதல் நாடகத்தில் ராதா ஹீரோயினை பிடித்து நாற்காலியில் தள்ளிவிட்டு நாற்காலியில் கையை வைத்துக் கொண்டு ஆடியன்சுக்கு முதுகை காட்டியபடி 15 நிமிடம் வசனம் பேசுவார், கைதட்டல் அள்ளும்.


ஒரு நாடகத்தில் மோட்டார் சைக்கிளில் மேடைக்கு வந்து ஒரு ரவுண்ட் அடித்து அதை மேடையின் விழிம்பில் நிறுத்தி விட்டு ஸ்டைலாக இறங்குவார். இன்றைக்குள்ள ஹீரோ அறிமுகக் காட்சி போன்று அது.


திருச்சியில் கீமாயணம் நாடகம் நடத்த போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் போட்டார் ராதா. நாடகம் ஆரம்பிக்கும் முன்பு மேடையில் நின்று பேசிய ராதா. "இந்த நாடகத்துக்கு அரசாங்கம் தடை போட்டிருக்கு. போலீசு எந்த நேரத்துலேயும் உள்ளே வரலாம். தடியால் அடிக்கலாம். துப்பாக்கியால் சுடலாம். என்ன மாதிரி ஆம்பளைங்க மட்டும் உட்கார்ந்து நாடகம் பாருங்க. மற்றவங்க இப்பவே டிக்கெட் காசை வாங்கிட்ட வெளியில போயிடுங்க" என்றார்.


எம்.ஆர்.ராதாவின் நாடக கலாட்டாக்களை தடுக்க முடியாத அரசு நாடக தடை சட்டத்தையே சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இப்போது சொல்லுங்கள் எம்.ஆர்.ராதா சூப்பர் ஸ்டார்தானே...


Advertisement
உறுதிகொள் படத்திற்கு ரிவைசிங் கமிட்டியில் யுஏஉறுதிகொள் படத்திற்கு ரிவைசிங் ... "எங்களுக்கு மக்களே எஜமானர்கள் டெல்லி கணேஷின் "கில்லி அனுபவம் "எங்களுக்கு மக்களே எஜமானர்கள் ...


வாசகர் கருத்து (2)

vns - Delhi,இந்தியா
18 செப், 2017 - 05:49 Report Abuse
vns இந்துக்களை எதிர்த்தவர்.
Rate this:
கவிவாலிதாசன் - தமிழ்நாடு,இந்தியா
17 செப், 2017 - 15:40 Report Abuse
கவிவாலிதாசன் இவர் நாடக வேல் மட்டுமல்ல நடிப்பிலும் வேல் தான். நடிகர்திலகத்திற்கு இணையாக வலம் வந்த தமிழ் திரை உலக ஜாம்பவான். நாடகத்திற்கு இலக்கணம் வகுத்து வளர செய்த இந்த மாபெரும் நடிகரை நினைவு கூர்ந்து மீண்டும் அந்த மாபெரும் கலையை மீட்டெடுக்க உறுதி இந்நாளில் உறுதி yerpom
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in