வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சினேகம் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் உறுதிகொள் பசங்க படத்தில் அறிமுகமான கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம். மேக்னா ஹீரோயின். அகிலேஷ் காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜூட் லிங்கர் இசை அமைத்துள்ளார். ஆர்.அய்யனார் இயக்கி உள்ளார்.
இது பள்ளி மாணர்களுக்கு இடையே வரும் காதல், மோதல் பற்றிய கதை. இந்தப் படம் கடந்த மாதம் தணிக்கை குழுவிற்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்க முன் வந்தது. இதை ஏற்காத தயாரிப்பாளர்கள் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் படத்தை பார்த்து விட்டு கிளைமாக்சில் வன்முறை அதிகமாக காட்டப்படுகிறது. அதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.
"அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர், முகம் சுழிக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் வெளிவருகிறது. என்றார் இயக்குனர் ஆர்அய்யனார்.