பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கதில் தூய்மையே சேவை என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக வருகிற செப்டம்பர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தூய்மையே சேவை திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த பணிக்கு நேரம் ஒதுக்கி செயல்பட வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தூய்மையான இந்தியா என்பது ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் நாம் செய்யும் புனித சேவை ஆகும். இதில் திரைப்படத் துறையில் பிரபலமாக இருப்பவர்களால் நிச்சயம் சாதகமான நிலைமையை உருவாக்கும் சக்தி இருக்கிறது. எனவே தூய்மையே சேவை இயக்கத்திற்கு தங்களது ஆதரவை நாடுகிறேன். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் நீங்களும் கலந்துகொள்வதை விரும்புகிறேன். இதேபோல் தூய்மை இந்தியா திட்டத்திற்கும் நீங்கள் சிறிது காலத்தை அர்ப்பணித்திட வேண்டுகிறேன். தூய்மையே சேவை இயக்கத்தில் நீங்கள் பங்கேற்பதன் மூலம் பல லட்சம் மக்களை இதில் இணைத்திடுவதற்கு உதவியாக அமைந்திடும்.
தேச தந்தை மகாத்மா காந்தி தூய்மையான இந்தியா குறித்து கனவு கண்டார். அவருடைய உயர்வான சிந்தனைகளையும், 125 கோடி இந்திய மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உணர்வின் அடிப்படையிலும் தூய்மையை பேணுவது குறித்த நமது உறுதிமொழியை புதுப்பிப்போம். காந்தி பிறந்தநாள் வரை இதற்காக நாம் முழு அளவில் ஆதரவு அளிப்போம். நாடு முழுவதும் தூய்மையை பேணுவது தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்போம். அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டை தூய்மையாக உருவாக்குவதுதான் மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும். இதன் மூலம் புதிய இந்தியாவையும் கட்டமைப்போம். இவ்வாறு அதில் மோடி கூறியுள்ளார்.