தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக என் மனசு தங்கம் படத்தை அடுத்து இப்படை வெல்லும் மற்றும் பிரியதர்ஷன் இயக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். இதில் பிரியதர்ஷன் இயக்கிய படம் மலையாளத்தில் வெளியான மகஷின்டே பிரதிகாரம் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் உதயநிதியுடன் பார்வதிமேனன், நமீதா நாயர், டைரக்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை குற்றாலம், தென்காசி, பாவூர்சத்திரம் போன்ற பகுதிகளில் நடத்தி வந்த பிரியதர்ஷன் 38 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டாராம். தற்போது அப்படத்தின் டப்பிங் பணிகள் நடக்கிறது. அதோடு, இந்த படத்தையடுத்து இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறாராம் பிரியதர்ஷன். அதனால் உதயநிதி நடித்துள்ள படத்தின் இறுதிகட்ட பணிகளுக்கிடையே சல்மான்கான் படவேலைகளையும் தற்போது தொடங்கியிருக்கிறாராம்.