Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சல் அரசன் வரான் : செப்., 21-ல் டீசர் வெளியீடு

16 செப், 2017 - 18:08 IST
எழுத்தின் அளவு:
Mersal-teaser-date-announced

தெறியை தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணி இணைந்துள்ள படம் மெர்சல். விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் மெர்சல் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் தற்போது நடைபெற்று வருகிறது. இத்துடன் மெர்சல் ஷூட்டிங் முழுவதுமுாக முடிவடைகிறது. இன்னொரு பக்கம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார். ரூ.135 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் அஜித்தின் விவேகம் டீசர் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்த நிலையில் அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மெர்சல் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற செப்., 21-ம் தேதி, இயக்குநர் அட்லீயின் பிறந்தநாளன்று மாலை 6மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி இருப்பதுடன் டீசர் வெளியீட்டு தேதியை டிரென்ட்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
ஊட்டியில் தொடங்கிய நரகாசூரன்ஊட்டியில் தொடங்கிய நரகாசூரன் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரியதர்ஷன் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்த ...


வாசகர் கருத்து (5)

ram -  ( Posted via: Dinamalar Android App )
17 செப், 2017 - 16:13 Report Abuse
ram அபூர்வ சகோதரர்கள்
Rate this:
younus -  ( Posted via: Dinamalar Android App )
17 செப், 2017 - 09:47 Report Abuse
younus I Am Waiting
Rate this:
17 செப், 2017 - 13:08Report Abuse
ArokiarajXanaEthu Oru padam aaaa...
Rate this:
skv - Bangalore,இந்தியா
17 செப், 2017 - 09:36 Report Abuse
skv<srinivasankrishnaveni> இன்று மாலை எங்கள் வீட்டுலே கம்தொனோ என்ற இந்திப்படம் பார்த்தேன் ஆஹா எவ்ளோ நன்னாயிருந்தது பலமுறைப்பார்த்தும் முழுக்கவே இல்லியே பின்னணி இசை எவ்ளோ அழகா இருந்துது தென்றலாய் வருடியது மனமே அவ்ளோ ஆனந்தமா இருக்கு . எவன் இசை அமைத்தாலும் இசையின் ஓசை காது ஜவ்வுகளைகிழிச்சு எரிச்சல்தான் வரத்து எப்படீங்க நௌஷாத அலி அவ்ளோ இனிமையா இருந்துது நம்மளாலேயும் கே வி மஹாதேவன் msv என்று எவ்ளோ பேரு இருந்தா நன்னா இருந்தது ஆனால் சத்தம் அதிகமா இருந்துது என்பதும் உண்மை இதுலே அர்ரேன்னாமா பண்ணிருக்காருன்னு
Rate this:
Kailash - Chennai,இந்தியா
17 செப், 2017 - 00:03 Report Abuse
Kailash அட்லீ படம் என்றாலே ரீமேக் தான். ஏற்கனவே அரைத்த மாவில் திரும்ப திரும்ப அரைத்து புதுவிதமாக இட்லி செய்பவர் அட்லீ. மெர்சல் எந்த படத்தின் ரீமேக்கோ? தெரிய வில்லை மூன்றுமுகம், ஒரு கைதியின் டைரி என்று நியூஸ் வருகிறது. புது வித கதையே கிடைக்கவில்லையா. பட்ஜெட் படத்தில் பல கதைகள் புதிதாக உள்ளது கேரளா பக்கம் சிம்பிளான கதைகளில் பெரிய நடிகர்கள் நடிக்கின்றனர். அது போல இங்கே எப்போது வரும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karuppan
  • கருப்பன்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
  Tamil New Film Theeran Adhigaram Ondru
  Tamil New Film Nadodi Kanavu
  • நாடோடி கனவு
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : சுப்ரஜா
  • இயக்குனர் :வீரசெல்வா
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in