Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தணிக்கையில் நடக்கும் பனிப்போர்

16 செப், 2017 - 15:35 IST
எழுத்தின் அளவு:
Cold-war-in-Censor-board

சென்னை மண்டல தணிக்கை அதிகாரிக்கும், ரிவைசிங் கமிட்டிக்கும் கடந்த சில வருடங்களாகவே ஒரு பனிப்போர் நடைபெற்று வருகிறது. தணிக்கை அதிகாரி ஏ சான்றிதழ் வழங்கிய படத்துக்கு ரிவைசிங் கமிட்டியில் யு சான்றிதழ் வழங்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதன் மூலம் இந்த பனிப்போர் அவ்வப்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் நடித்த படம் ஒரு பக்க கதை. இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது, படத்தில் ஒரு காட்சியில் மருத்துவரிடம் கதாநாயகி பேசும் போது Intercourse என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.

இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கைக் குழுவில் தெரிவிக்க, அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது. இதனால் ஒரு பக்க கதை படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஒரு பக்க கதை படத்தை மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி Intercourse வார்த்தைக்கு அனுமதியளித்தது மட்டுமல்ல யு சான்றிதழும் வழங்கியுள்ளார்கள். ஒரு பக்க கதை படத்துக்கு ரிவைசிங் கமிட்டி யு சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்துள்ளது.

Advertisement
மணிரத்னத்தின் ஆச்சரியத் தேர்வுகள்மணிரத்னத்தின் ஆச்சரியத் தேர்வுகள் ஊட்டியில் தொடங்கிய நரகாசூரன் ஊட்டியில் தொடங்கிய நரகாசூரன்


வாசகர் கருத்து (1)

N. Sridhar Iyer - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
16 செப், 2017 - 16:36 Report Abuse
N. Sridhar Iyer பட்ட பகலில் ஆறு பேர் எட்டு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை மானபங்க படுத்தும் இந்த காலத்தில், இந்த ஒரு வார்த்தையால்தான் களங்கம் வந்து விட போகிறதா? இதுவும் ஒரு விளம்பர தந்திரமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in