'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' படம் ரிலீசுக்கான தேதியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.. மோகன்லால்-விஷால் என்கிற புதிய கூட்டணியே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்திருக்கிறது.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இந்தப்படத்தில் மிக வித்தியாசமான, வில்லனும் நல்லவனும் கலந்த ஒரு கேரக்டரை உருவாக்கியதோடு, அதில் விஷால் தான் நடித்தாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து விஷாலை அழைத்து வந்து இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்..
அதுமட்டுமல்ல, “இது ஒரு அருமையான கதை.. இப்படிப்பட்ட ஒரு ரோலுக்காகத்தான் நான் காத்துக்கொண்டு இருந்தேன்” என விஷாலும் கூறியிருந்தார்... . இதில் டாக்டர் சக்திவேல் பழனிசாமி என்கிற கேரக்டரில் விஷால் நடித்துள்ளார். இந்தப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிட்டார்கள். சுமார் இரண்டு நிமிடம் ஓடும் டிரைலரில் விஷாலின் காட்சிகள் இரண்டே முறைதான் காட்டப்பட்டன.. விஷால் கேரக்டர் பற்றி அதிக தகவல்களை தரவேண்டாம் என்பதுதான் அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது
டிரைலரின் இறுதியில் மோகன்லாலிடம் 'இப்ப சொல்லுங்க.. வில்லன் யாரு.. நீங்களா..? இல்ல நானா' என கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்லமுடியாமல் அதிர்ந்துபோய் மோகன்லால் அமர்ந்திருப்பதையும் காட்டி இதில் விஷால் வில்லனா இல்லையா என்கிற சந்தேகத்தை மீண்டும் கிளப்பி விட்டுள்ளார்கள்.. இந்தப்படத்தில் விஷால் மட்டுமின்றி, ஸ்ரேயா என்கிற பாடகி கேரக்டரில் ஹன்சிகாவும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராக்ஷி கன்னா ஆகியோரும் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.