Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னத்தின் ஆச்சரியத் தேர்வுகள்

16 செப், 2017 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Maniratnams-next-film-and-artists

காற்று வெளியிடை படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் என்ன படத்தை இயக்கப் போகிறார், அதில் யார் நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே பலவிதமான தகவல்கள் வெளிவந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவருடைய நட்சத்திரத் தேர்வு அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு வித்தியாசமான கூட்டணியை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இவர்கள் அனைவருமே இப்போதைக்கு மிகவும் பிஸியாக இருக்கும் நட்சத்திரங்கள்தான். ஒருவருக்கொருவர் பொருத்தமில்லாத தனித் தன்மையுடன் கூடியவர்கள் இவர்கள். இப்படி ஒரு கூட்டணியை வைத்துக் கொண்டு எந்த மாதிரியான படத்தை மணிரத்னம் கொடுக்கப் போகிறார் என்று ஒரு எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பிலேயே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

மற்றவர்களின் தேர்வு எப்படியோ, ஆனால், சிம்புவைத் தேர்வு செய்தது மட்டுமே திரையுலகத்தில் உள்ள பலரையும் வியக்க வைத்துள்ளது. அவர்களது சொந்தத் தயாரிப்பில் உருவான படத்திற்கே படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வரமாட்டார் சிம்பு, அப்படியிருக்கு அதைப் பற்றித் தெரிந்தும் மணிரத்னம் அவரைத் தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியாத சிம்பு இந்த வாய்ப்பையாவது சரியாகப் பயன்படுத்தி மணிரத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பாரா என்று திரையுலகத்தில் உள்ளவர்களே கேள்வி கேட்கிறார்கள். அது சிம்புவுக்குக் கேட்டால் சரி.

Advertisement
மெர்சல் பட்ஜெட் ரூ.135 கோடிமெர்சல் பட்ஜெட் ரூ.135 கோடி தணிக்கையில் நடக்கும் பனிப்போர் தணிக்கையில் நடக்கும் பனிப்போர்


வாசகர் கருத்து (6)

Naduvar - Toronto,கனடா
16 செப், 2017 - 20:21 Report Abuse
Naduvar மணிரத்தினம் ஓய்வு பெறுவது நல்லது...இன்னும் இளமையா இருக்குறத நினைச்சுக்குடு கன்றாவியான படத்தை எடுத்துக்கிட்டு இருக்காரு.
Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
16 செப், 2017 - 17:53 Report Abuse
Vasanth Saminathan கடைசியில இருக்குற எல்லாரும் கழண்டுக்கிட்டு கடைசியா கிடக்குற சிம்புவை வச்சுதான் படம் எடுக்கப்போறாரு. ஏன் இவ்ளோ பில்ட் அப்
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
16 செப், 2017 - 17:07 Report Abuse
Dol Tappi Maa மணிரத்தினம் படத்தில் அடி வாங்கிய விக்ரம் அதோடு எழுந்திருக்கவில்லை. நடிகை ராதாவின் பெண்ணும் அப்படிதான். விஜய்சேதுபதி கூட்டணி வெற்றி தருகிறதா என்று பார்ப்போம்.
Rate this:
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 செப், 2017 - 15:24 Report Abuse
Susil தோல்வி படம் கொடுத்தவருக்கு, அடுத்த படத்திற்கு இவ்வளவு பில்ட் அப் தேவையா? இவர் மனைவி "என் புருஷன் படம் படித்தவனுக்கு மட்டுமே புரியும் என்றார்" அப்படியானால் தமிழ்நாட்டில் இந்த வருடம் படித்தவன் எவனுமே இல்லையா? பின் ஏன் அவர் படம் தோல்வி அடைந்தது? கோவணம் கட்டும் ஊரில் வேட்டி உடுப்பவன் முட்டாள் என்பார்கள், அப்போ இங்கே முட்டாள் யார்?
Rate this:
N. Sridhar Iyer - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
16 செப், 2017 - 15:23 Report Abuse
N. Sridhar Iyer சிம்புவா, எனக்கு எதுக்கு இந்த வம்பு. என்னை விட்டுடு, நான் வரலை இந்த விளையாட்டுக்கு!
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in