பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், தயாரித்து, நடித்து வெளியான படம் 'துப்பறிவாளன்'. இப்படத்துக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வியாழன் அன்று படம் வெளியானதாலோ என்னவோ.... முதல்நாள் கூட்டம் அவ்வளவாக இல்லை. வெள்ளிக்கிழமை முதல் ஆடியன்ஸ் வருகை அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக ஹிட்டுக்காக காந்திருந்த விஷால், மிஷ்கின் இருவருக்கும் இப்படம் சொல்லும் படியாக அமைந்திருக்கிறது. இதனிடையே சமீபகாலமாக ஒரு படத்தின் தொடர்ச்சி வெளியாகி வரும் நிலையில் துப்பறிவாளன்-2 உருவாக இருப்பதாக விஷால் அறிவித்துள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க, சென்சாருக்கு முன் இரண்டு மணி நேரம் 40 நிமிடம் இருந்த படத்தை 20 நிமிடங்கள் குறைத்தார் மிஷ்கின். வெட்டப்பட்ட 20 நிமிட காட்சிகளுடன், ஏற்கனவே படமாக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத காட்சிகளுடன், இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பை நடத்தி.... அதாவது விஸ்வரூபம்-2 படத்தை கமல் தயார் செய்ததுபோல் துப்பறிவாளன்-2 படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் அடிபடுகிறது.