இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்' படத்தின் டீசர் முந்தைய தமிழ்த் திரைப்பட டீசர்களின் சில சாதனைகளை முறியடித்து நேற்று அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற உலக சாதனையையும் படைத்தது. 'விவேகம்' டீசரின் உலக சாதனைக்காக நேற்று பல ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் உருவாக்கி டிரென்டிங்கில் வர வைத்தனர் அஜித் ரசிகர்கள். விஜய் பட டீசர்களின் சாதனைகளையும் 'விவேகம்' டீசர் முறியடித்துவிட்டதால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். அதனால், அவர்கள் 'மெர்சல்' டீசர் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித்தின் 'விவேகம்' டீசர் 5,79,000 லைக்குகளை இதுவரை பெற்றுள்ளது. இந்த சாதனையை 'மெர்சல்' படத்தின் டீசர் முறியடிக்க முடியுமா? அல்லது, 'கபாலி' டீசர் இதுவரை பெற்றுள்ள 3,42,00,000 பார்வைகளை முறியடிக்க முடியுமா என்பதுதான் அடுத்த கேள்வியாக எழும். இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிக செயல்பாடுடன் இருக்கும் விஜய், அஜித் ரசிகர்களால் 'கபாலி' டீசரின் பார்வை எண்ணிக்கையை முறியடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம்தான். 'விவேகம்' டீசர் கூட இதுவரை 2 கோடி பார்வைகளைத்தான் பெற்றுள்ளது. விஜய்யின் 'பைரவா' டிசர் கூட 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைத்தான் பெற முடிந்தது.
விஜய்யின் 'மெர்சல்' டீசர் வந்த பின் அது 'பைரவா' பார்வை சாதனையை முறியடித்துவிடும். அதே சமயம் 'விவேகம்' டீசரின் பார்வையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், 'விவேகம்' டீசரின் லைக்குகளைக் கடக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அடுத்த சில நாட்களில் 'மெர்சல்' டீசர் கண்டிப்பாக வெளிவந்துவிடும். அதனால் அடுத்த வாரத்தில் சில 'மெர்சல்' சாதனைகளை எதிர்பார்க்கலாம்.