Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 24 படங்களில் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை

16 செப், 2017 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Rajini-did-not-use-Super-star-title-in-24-movies

இன்றைக்கு சினிமாவுக்கு வருகிறவர்கள் முதல் படத்திலேயே அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என்ற பட்டத்தோடுதான் வருகிறார்கள். ஒரு படம் ஹிட்டானால் கேட்கவே வேண்டாம். அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்பார்கள். இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிற ரஜினிகாந்த் தனது 24 படங்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக் கொள்ளவில்லை.

பைரவி படம் வெளிவந்தபோது அதன் விநியோக உரிமையை பெற்றிருந்த கலைப்புலி எஸ்.தாணு, அவருக்கு பெரிய கட்அவுட் வைத்ததோடு பேப்பர் விளம்பரங்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்திருந்தார். ஆனால் ரஜினி "எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி ஜீனியஸ்கள் இருக்கும்போது எனக்கு இந்த பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம் எடுத்து விடுங்கள்" என்று கூறினார். அதற்கு தாணு "நான் படத்தை வாங்கியிருக்கிறேன். அதில் லாபம் சம்பாதிக்க எதுவும் செய்வேன் என்னை தடுக்காதீர்கள்" என்று கூறிவிட்டார்.

பைரவி படத்திற்கு பிறகு சில படங்களின் பேப்பர் விளம்பரங்களில்தான் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்களே தவிர படங்களின் டைட்டிலில் இடம்பெறவில்லை. பைரவிக்கு பிறகு இளமை உஞ்சலாடுகிறது, முள்ளும் மலரும், தாய் மீது சத்தியம், அவள் அப்படித்தான், ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், தர்மயுத்தம், அன்னை ஓர் ஆலயம், பில்லா உள்பட 24 படங்கள் வெளிவந்தது. எதிலும் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை.

1980ம் ஆண்டு வெளிவந்த நான் போட்ட சவால் என்ற படத்தில் அதன் இயக்குனர் புரட்சிதாசன் ரஜினியை கேட்காமலேயே அந்தப் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் என்று போட்டார். இதற்கு ரஜினி அவரை கோபித்துக் கொண்டாலும் அதன் பின் வந்த படங்களில் போடுவதை அவரால்கூட தடுக்க முடியவில்லை. அன்றிலிருந்து இன்று வரை ஒரே சூப்பர்ஸ்டார் அவர்தான்.

Advertisement
இசை அமைப்பாளர் சிற்பி மகனுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்துஇசை அமைப்பாளர் சிற்பி மகனுக்கு ... சாஹோ படத்தில் இரண்டு வேடங்களில் ஸ்ரத்தா கபூர் சாஹோ படத்தில் இரண்டு வேடங்களில் ...


வாசகர் கருத்து (2)

Raman Ganesan - Madurai,இந்தியா
16 செப், 2017 - 12:55 Report Abuse
Raman Ganesan நாமம் தமிழர் பெர்த், விஜய் ராஜ் சென்னை visil adcihann george ஜெய் ஹீந்திபுரம் மதுரை இன்னும் ஏன் ரஜினியை அசிங்கமா அசிங்கமா திட்டலை சீக்கீரம் அடுத்த நியூஸ் வரதுக்குள்ள வந்து கேவலமா திட்டுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in