வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'விவேகம்' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளை துவங்க இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் '2.0' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கவிருப்பது அஜித் நடிக்கும் படத்தை அல்ல, கமல்ஹாசனை வைத்து 'இந்தியன்-2' படத்தைத்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த 'இந்தியன்' படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக ஏற்கெனவே வெளியாகி வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாக உள்ளது.
இந்நிலையில் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது 'எந்திரனி'ன் இரண்டாம் பாகமாக '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர் அடுத்து 'இந்தியன்-2' வை இயக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.