டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய்சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகிற படம் - 'சீதக்காதி'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். அய்யா என்ற நாடக மேடைக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் 'சீதக்காதி' படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.
அதாவது, 75 வயது, 50 வயது மற்றும் 30 வயது என மூன்று விதமான வெவ்வேறு வயதுடைய தோற்றங்களில் நடிக்க இருக்கிறார். இவற்றில் 75 வயதுடைய கேரக்டருக்கு ஹாலிவுட் மேக்அப்மேனை பயன்படுத்த உள்ளனர். இதற்காக விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஹாலிவுட் மேக்அப் கலைஞரை சந்திக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.
'மிசஸ் டவுட்பயர்', 'தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்', 'டிராகுலா' போன்ற ஹாலிவுட் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள கிரேக் கேனம்தான் அவர். ஷாருக்கானின் 'பேன்' மற்றும் 'கபூர் அன்ட் சன்ஸ்' போன்ற ஹிந்தி படங்களுக்கும் மேக்அப் கலைஞராக பணியாற்றியுள்ளார் கிரேக் கேனம்.