'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம் இம்மாதம் 29 அன்று ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜயகுமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
பாலமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களில் ஆபாசமான வார்த்தைகள் சகட்டுமேனிக்கு இடம் பெற்றுள்ளன. அதை ஆபாசம் என்று குற்றஞ்சாட்ட முடியாத வகையில் புத்திசாதுர்யத்துடன் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.
முதல் வரியை கேட்கும்போது ஆபாசமாகவும், அடுத்த வரியுடன் சேர்ந்து வரும்போது சாதாரண வரியாகவும் தெரிவதுபோல் பாடல்கள் எழுதப்பட்டுள்ளது.
அடல்ட்காமெடி படம் என்ற பெயரில் உருவவாக்கப்பட்டுள்ள ஹர ஹர மகாதேவகி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டால் பட அதிபர்கள் வருத்தப்படுவார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளரோ க்ளீன் ஏ என்று சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.