'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிஜாய் நம்பியார் டைரக்சனில் துல்கர் நடித்துள்ள 'சோலோ' மலையாளம் தமிழ் என இருமொழிப்படமாக உருவாகி உள்ளது.. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் செப்-21 என அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் தற்போது அக்-5-ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துல்கர் நடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள 'பறவ' படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதே செப்-21ல் 'பறவ' படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்..
ஏற்கனவே ஓணம் பண்டிகைக்கே இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.. ஆனால் அப்போது நான்கு பெரிய படங்கள் ரிலீசானதால், இந்தப்படத்திற்கு தியேட்டர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்காமல் போன காரணத்தால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் இணைந்து நான்கு படங்களில் காமெடி நடிகராக நடித்தவருமான 'பிரேமம்' புகழ் சௌபின் சாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.